இனிய காலை
நற்காலை இனிதேவிடிந்தது
வெளிச்சமோ இருளைகிழித்து
விருட்டென வெளிவந்தது
கதிரவன் கதிர்கள்
கிழக்கே முளைக்கலாச்சு.
பறவையினம் சிறகெடுத்தது
கரவைதாமும் குரல்கொடுத்தது
மலரினங்கள் சிரித்தன
இயற்கையின் இளமை
அழகாக புலர்ந்தது
மழை
வரண்டிடுமோ இந்நாடென இருந்தநிலையில்
பெய்யென பெய்தமழை கண்டுயாரும்
சபிக்கவில்லை
சலிக்கவில்லை.
வாட்டியெடுத்த வேனிர்காலம் முடிந்தபின்னும்
மறுமுறை படையெடுத்த
மாபெரும் வேட்கையில்
தடுமாறியது இப்பூமி.