Monday, May 9, 2022

கவிதை - இனிய காலை

 இனிய காலை


நற்காலை இனிதேவிடிந்தது

வெளிச்சமோ இருளைகிழித்து

விருட்டென வெளிவந்தது 

கதிரவன் கதிர்கள் 

கிழக்கே முளைக்கலாச்சு.


பறவையினம் சிறகெடுத்தது

கரவைதாமும் குரல்கொடுத்தது 

மலரினங்கள் சிரித்தன

இயற்கையின் இளமை 

அழகாக புலர்ந்தது 


கவிதை - மழை

  மழை

வரண்டிடுமோ இந்நாடென இருந்தநிலையில்

பெய்யென பெய்தமழை கண்டுயாரும்

சபிக்கவில்லை

சலிக்கவில்லை.

 

வாட்டியெடுத்த வேனிர்காலம்  முடிந்தபின்னும்

மறுமுறை படையெடுத்த

மாபெரும் வேட்கையில்

தடுமாறியது இப்பூமி.



Friday, May 6, 2022

கவிதை - வெள்ளைமலர்கள்

 


என் மனம்போலே
வெண் மலர்கள்
மலர்ந்த  போதே
சிரிக்கும் அழகே தனி
ஆயிரம் வண்ணம் இருந்தாலும்
வெள்ளை தனி மலர்ச்சி 
கண்ணுக்குத் தருமே குளிர்ச்சி.

#சுரேஷ் ராஜகோபால், சென்னை